February 2012
M T W T F S S
« Jan    
 12345
6789101112
13141516171819
20212223242526
272829  

மாதத்திரட்டு

ஏபிஎம் மீடியாவின் ஐந்தாவது இலக்கியச் சந்திப்பு

Ilakkiya-Sandipu

எதிர்வரும் பௌர்ணமி இரவு (07-02-2012 செவ்வாய் கிழமை) ஏபிஎம் மீடியாவின் ஐந்தாவது இலக்கியச் சந்திப்பு இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் “தமிழ் குறும்பட முயற்சிகளும் அனுபவங்களும்” எனும் தலைப்பில் உரையாடல் நடைபெறும். எனவே தமிழ்ச் சூழலில் வெளிவந்த குறும்படங்கள் பற்றியும் தமது குறும்பட முயற்சிகள், அனுபவங்கள், சர்வதேச குறும்படங்கள் போன்ற விடயப் பொருட்களில் பங்கேற்பாளர்கள் தயாராகி வருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

பிற பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் கலந்து கொள்ள முடியும். தங்களது படைப்புகள், இதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள், குறுந்தட்டுகள் என அனைத்து [மேலும்]

புகைப்படம்: பேருவளை நூல் அறிமுக விழா

கவிஞர் ஏ. இக்பால் தனது விமர்சன உரையில்

சென்ற சனிக்கிழமை மாலை பேருவளை அல்-ஹுமைஸரா பாடசாலையின் விரிவுரை மண்டபத்தில் ‘பத்து நூல்கள் அறிமுக விழா’ இனிதே நடைபெற்றது. பேருவளை மற்றும் தர்கா நகர் பிரமுகர்கள் குறைவாக வருகை தந்திருந்த போதும் பேருவளை ஜாமிஆ நளீமிஆவைச் சேர்ந்த மாணவர்கள் பெருந்திரளாக கலந்து சிறப்பித்தனர். ஜாமிஆவின் விரிவுரையாளர் அஷ்ஷெய்க் இம்தியாஸ் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கவிஞர் ஏ. இக்பால் அவர்கள் ‘இஸ்லாமிய இலக்கியம் புத்துயிர்ப்பும் புரிதல்களும்’ என்ற நூலை ஒட்டி தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார். ஜாமிஆ [மேலும்]

உரையாடல்: சிவில் சமூகத்தை வலுவூட்டல் 8

P1020277

எஸ்.எல்.எம். ஹனீபா: அப்பயும் வலுவானதா இருக்கல்ல. மன்சூர் சுடப்பட்டு ஒரு வருடம் கழித்துத்தான் – அதாவது 372 ஆவது நாள்தான் அஷ்ரப் சம்மாந்துறைக்கு வந்தார். ஆரம்பத்திலேயே பிழ நடந்திட்டு. சம்மாந்துறை யாஸின்பாவாவுடைய வீட்டு ஆண்டுக் கத்தத்திற்கும் தலைவர் வரல.

ஏஆர். பர்ஸான்: அதில் ஒரு பிரச்சினை இருந்தது உண்மை. நான் நடைமுறையை அவதானித்து இதைச் சொல்கிறேன். 1989 காலப்பகுதியில் டம்மி வேட்பாளர்களைப் போட்டுத்தான் தேர்தலை மு.கா எதிர்கொண்டது. நேரடியாக வரமுடியாமல் இருந்தது. அன்று ‘ரோ’வுடைய உதவி இல்லாவிட்டால் [மேலும்]

பேருவளையில் நூல் அறிமுக விழா

Invitation-N

ஏபிஎம் மீடியா ஏற்பாட்டில் எதிர்வரும் சனிக்கிழமை (14.01.2012) அஷர் தொழுகையின் பின்னர் 4.00 மணிக்கு பேருவளை அல்-ஹுமைஸராவில் எனது பத்து நூல்கள் அறிமுக விழா நடைபெற இருக்கின்றது. இந்நிகழ்வில் உங்களையும் நான் அன்புடன் அழைகிறேன். வெளிவந்துள்ள நூல்களின் பிரதிகளை அங்கு வாங்கிக் கொள்ள முடியும்.

நிகழ்வு

உரையாடல் பத்து நூல்கள் அறிமுக விழா காலம் 14.01.2012 (சனிக்கிழமை) நேரம் பிற்பகல் 4.00 மணிக்கு (அஷர் தொழுகையைத் தொடர்ந்து) இடம் கேட்போர் கூடம், அல்-ஹுமைஸரா ஸ்கூல், பேருவளை.

அன்புடன்,

[மேலும்]

உரையாடல்: சிவில் சமூகத்தை வலுவூட்டல் 7

Thumb8

ஏஆர். பர்ஸான்: இந்த அனுபவங்களிலிருந்து அல்லது இதனூடாக எனக்குக் கிடைத்த அனுபவங்களிலிருந்து சில விடயங்களை என்னால் உணர்ந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. குறிப்பாக கட்சி முறைமைகளுக்குள்ளே இருக்கும் பல விடயங்களை அறிந்து கொண்டேன். பேரினவாதக் கட்சிகளைப் பற்றிப் பேசுவதைவிட நமது அரசியல் கட்சிகளின் போக்குகளுக்கும் சிவில் சமூகத்திற்கும் இடையிலான தொடர்புகளை கதைப்பது முக்கியம் என்று கருதுகிறேன். இந்தத் தேர்தல்களின் போது எங்களுடைய தோழர்களுடன் உரையாடும் போதெல்லாம் இந்த விடயங்களை நான் அவர்களுக்கு கவலையுடன் வெளிப்படுத்தியிருக்கின்றேன். எம்மிடையே இருக்கின்ற அல்லது [மேலும்]

புகைப்படம்: நான்காவது இலக்கியச் சந்திப்பு

P1030254

எமது நான்காவது இலக்கியச் சந்திப்பு நேற்று (08-01-2012) இரவு “போருக்குப் பிந்திய எழுத்து” எனும் தலைப்பில் நடைபெற்றது. போருக்குப் பிந்திய எழுத்துக்கள் பெருமளவு வெளிவராத நிலையில் போர்க்காலச் சூழலில் போர் ஏற்படுத்திய அத்தனை சுவடுகளும் எழுத்துக்களாகியிருக்கின்றனவா? என்ற வாதவிவாதம் மேலெழுந்து போர் சார்ந்த, குறிப்பிட்ட சூழல் சார்ந்த எழுத்துக்கள் இலக்கியமாக வேண்டுமா? ஆக, செவ்வியல் பிரதிகளே காலத்தை வென்று வாழக்கூடியன என்று எதிர்வாதம் முன்வைக்கப்பட்டது. ஆனால் எழுத்தின் வீரியம் சத்தியத்தை, அநீதியை எதிர்ப்பதில் எழுத்தின் வகிபாகம் என்ன [மேலும்]

ஏபிஎம் மீடியாவின் நான்காவது இலக்கியச் சந்திப்பு

Ilakkiya-Sandipu

எதிர்வரும் பௌர்ணமி இரவு (08-01-2012 ஞாயிறு) ஏபிஎம் மீடியாவின் நான்காவது இலக்கியச் சந்திப்பு இடம்பெற உள்ளது. இந்நிகழ்வில் “போருக்குப் பிந்திய எழுத்து” எனும் தலைப்பில் உரையாடல் நடைபெறும். எனவே எமது சூழலில் போருக்குப் பிந்தி வெளிவந்த டைப்பிலக்கியங்கள் பற்றிய தரவுகள், மதிப்பீடுகள், போதாமைகள், புதிதாக ஏற்பட்டுள்ள அக நெருக்கடிகள் போன்ற விடயப் பொருட்களில் பங்கேற்பாளர்கள் தயாராகி வருமாறு அன்புடன் வேண்டிக் கொள்கிறோம்.

பிற பகுதிகளிலிருந்தும் வாசகர்கள் கலந்து கொள்ள முடியும். தங்களது படைப்புகள், இதழ்கள், சஞ்சிகைகள், நூல்கள், குறுந்தட்டுகள் என [மேலும்]

உரையாடல்: சிவில் சமூகத்தை வலுவூட்டல் 6

P1020253

மிஹாத்: முஹ்சின் சேர் அவர்களுக்கு வழங்கப்பட்டிருந்த தலைப்பு ஜனநாயகமும் சிவில் சமூகமும். ஜனநாயகம் என்பதில் முழுமையாக அவர் அதே கருத்திலேயே இருந்தார். இன்றைக்கு அமெரிக்கா, சர்வதேச ஏகாதிபத்தியம் வலியுறுத்துகின்ற ஜனநாயகம் என்கின்ற ஒரு கருத்தாக்கத்திற்கு எதிராக இருப்பதென்பது ஒரு விடயம். பொதுவாக ஜனநாயகம் இப்படித்தான் என்று முத்திரை குத்துவது ஒரு விடயம். இதில் சர்ச்சை ஒன்று நிலவியதாக நான் நினைக்கிறேன். அடுத்தது, இலங்கையில் கட்சி அரசியலும் அனுபவமும் என்ற தலைப்பில் இருவர் கருத்துத் தெரிவிக்க இருக்கின்றனர். எஸ்.எல்.எம் [மேலும்]

உரையாடல்: சிவில் சமூகத்தை வலுவூட்டல் 5

P1020258a

அப்துர் ரஹ்மான்: நாங்கள் வருவதற்கு முன்னர் நடந்த உரையாடலின் சுருக்கத்தை சொன்னால் நன்றாக இருக்கும்.

அ.வா. முஹ்சின்: எனக்குத் தந்திருந்த தலைப்பு, ஜனநாயகமும் சிவில் சமூகமும். இதில் என்னுடைய கருத்து, ஜனநாயகம் என்பது வெள்ளைக் கிறிஸ்தவர்களுடைய ஒரு அரசியல் வடிவம். அதை நாம் முழுமையாக நிராகரிக்க வேண்டும். ஆகவே, ஜனநாயகத்தைக் கொண்டு வந்து சிவில் சமூகத்தில் சேர்ப்பது திரும்பவும் அந்த வெள்ளைக் கிறிஸ்தவ ஆதிக்கத்தை கொண்டு வந்து சேர்ப்பது போலதான். எனவே, அதிலிருந்து சிவில் சமூகக் கட்டமைப்பொன்றை [மேலும்]

உரையாடல்: சிவில் சமூகத்தை வலுவூட்டல் 4

P1020268

பலுல் ஹக்: இந்தத் தலைப்பில் எனக்குள் எழுகின்ற ஒரு கேள்வி, சிவில் சமூகத்தை அரசியலற்ற ஒரு சமூகமாக அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் என்பது, குடும்ப அரசியல் நடக்கும் ஒரு நாட்டில் அல்லது பிரபுக்களின் அரசியல் நடக்கும் ஒரு சூழ்நிலையில் மக்கள் அரசியல் தன்மை இல்லாமல் இருப்பது ஓரளவு ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கும். இன்று அரசை நிறுவும் ஒரு சுழற்சியில் மக்கள்-ஆட்சி-மக்கள்-ஆட்சி என்று சுழற்சியான வட்டத்தில் மக்கள்தான் அந்த ஆட்சியை உருவாக்குகிறார்கள். வாக்களிப்பதன் ஊடாகவும் இயங்குவதன் [மேலும்]

Page 1 of 4812345...1015202530354045...Last »